புவனேஸ்வர்: ஜி.எஸ்.டி., மசோதா, ரூபாய் நோட்டு வாபஸ் ஆகியவை இந்திய பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
உறுதி:
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில் ஜெட்லி பேசியதாவது: ஜி.எஸ்.டி., மசோதா, ரூபாய் நோட்டு வாபஸ் ஆகியவை இந்திய பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன். ஜிஎஸ்டி., மூலம் மத்திய அரசுக்கு அதிகளவில் வரி கிடைக்கும். ஜிஎஸ்டி மிக திறமையான அமைப்பாக உள்ளது. இது பல ஓட்டைகளை அடைக்கும். இது ஒடிசா உள்ளிட்ட நுகர்வோர் மாநிலங்களுக்கு அதிக பலன் கொடுக்கும். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் முடிந்த பிறகு, இந்திய பொருளாதாரம் மீண்டும் முழு அளவில் இயல்பு நிலைக்கு திரும்பும். ஜிடிபியின் அளவு அதிகரிக்கும். வரி அதிகரிக்கும். வங்கிகளுக்கு வரும் அதிக பணம், இந்திய பொருளாதாரத்திற்கு, நல்ல பலன் கொடுக்கும் என்றார்.
English Summary : GST, bill, bill withdrawn and would create a major shift in the Indian economy, Finance Minister Arun Jaitley said.