புதுடெல்லி : இரு மூத்த ராணுவ அதிகாரிகளை தேர்வு செய்யாமல் அடுத்த நிலையில் உள்ள துணை ராணுவ தளதிபதி ரவாத்தை நாட்டின் புதிய ராணுவ தளதிபதியாக பா.ஜ.,க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி அரசு தேர்வு செய்துள்ளது. இந்த தேர்வு குறித்து,நாட்டின் முக்கிய எதிர் கட்சியான காங்கிரஸ், இடது சாரிகள் கட்சிகள் கேள்வி எழுப்பின.
ராணுவத்தின் துணை தளபதியாக உள்ள லெப்டினன்ட் ஜெனரல் பிபின் ரவாத்தை நாட்டின் அடுத்த ராணுவ தளபதியாக பா.ஜ.க கூட்டணி அரசு நியமித்துள்ளது. ரவாத்தை காட்டிலும் இரு மூத்த அதிகாரிகள் உள்ளனர். இருப்பினும் அவர்களின் பணி மூப்பை கருத்தில் கொள்ளாமல் ரவாத் புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய இந்த நியமனம் குறித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறுகையில், ஒவ்வொரு அமைப்பிற்கும் ஒரு நிலைப்பாடு, மூப்பு நிலை பணி உயர்வு ஆகியவை உள்ளன. ஆனால் ராணுவத்தில் அத்தகைய நிலைகள் மீறப்பட்டு, ஒருவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. உலகிலேயே வேறு எந்த ராணுவ பிரிவிலும் நடைபெறாத நிகழ்வாக இது உள்ளது . ஏற்கனவே இரு உயர் அதிகாரிகள் சீனியாரிட்டி அடிப்படையில் முன்னிலையில் உள்ளனர். அவர்களுக்கு புதிய ராணுவ தளபதி பதவி தரப்படாமல் ரவாத்துக்கு பதவி தரப்பட்டுள்ளது. எதனால் இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது.
கிழக்கு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பிரவீன் பக்ஷி மற்றும் தெற்கு ராணுவ கமாண்ட் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் பி.எம். ஹரிஸ்ஆகியோர் லெப்டினன்ட் ஜெனரல் ரவாத்தை காட்டிலும் சீனியர் அதிகாரிகள் ஆவார்கள் . ஆனால் அவர்களுக்கு ராணுவ தளபதி பதவி அளிக்கப்படாமல் ரவாத்துக்கு பதவி உயர்வு தரப்பட்டு இருப்பதுகேள்வியை எழுப்புவதாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வலது கம்யூனிஸ்ட் கட்சியான சி.பி.ஐயின் தலைவர் டி.ராஜாவும் ரவாத்தை புதிய ராணுவ தளபதியாக நியமனம் செய்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்.
இந்த புதிய நியமனம் துரதிர்ஷ்ட வசமானது. இது ஜனநாயக நலனுக்கு ஏற்றதல்ல. பதவி நியமனத்தில் வெளிப்படைத்தன்மை, ஒருங்கிணைப்பு தேவை அப்படி இருந்தால் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். ஆனால் தற்போது பெரிய கேள்விகள் எழுகின்றன. என்றார்.
English Summary:
New Delhi: Two senior military officials at the next level unless you choose the country's new military leader Rawat Paramilitary leader the BJP-led NDA alliance has selected Gavin. Select this regard, the country's main opposition party, the Congress, the Left parties raised the question.