ஐதராபாத்: ஐதராபாத் நகரில் உபெர் நிறுவனத்தின் கார் டிரைவர் வங்கிக்கணக்கில் ரூ.7 கோடி டிபாசிட் செய்யப்பட்டது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்க நகை வியாபாரி:
இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்டபின்னர் நவம்பர் 2வது வாரத்தில் கார் டிரைவர் தனது வங்கிக்கணக்கில் ரூ.7 கோடி டிபாசிட் செய்துள்ளார். இவர் ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்தில் கணக்கு வைத்துள்ளார். நவம்பர் 8 முன் வரை அவரது வங்கிக்கணக்கு செயல்படாமல் இருந்துள்ளது. பணம் டிபாசிட் செய்யப்பட்ட பின்னர், இந்த பணம் தங்க நகை வியாபாரி ஒருவரது வங்கிக்கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.
அபராதம்:
இது குறித்து அவரிடம் விசாரணை நடந்த போது, பணம் எப்படி வந்தது தொடர்பான விபரத்தை கார் டிரைவரால் தெரிவிக்க முடியவில்லை. வங்கியில் சிசிடிவி ஆராய்ந்த போது, டிரைவருடன் பணிபுரிந்த சிலர், குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் டிபாசிட் செய்துள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து, பிரதமரின் கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 7 கோடிக்கு வரி செலுத்த அவர்கள் ஒப்பு கொண்டனர். இந்த திட்டத்தின் கீழ் அவர்கள் ரூ.3.5 கோடி வரி மற்றும் 25 சதவீத அபராதம் செலுத்த வேண்டி வரும். மிச்சம் உள்ள பணம் 4 வருடம் முடக்கி வைக்கப்படும் என தெரிவித்தனர்.
English summary:
Hyderabad: The Hyderabad city uper company car driver in the bank depositing Rs 7 crore was given shock to the authorities.