விஜயவாடா : ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில், மக்கள் படும் கஷ்டத்தை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
கவனம் தேவை:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தெலுங்கு தேச கட்சியின் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமாகிய சந்திரபாபு நாயுடு பேசியதாவது: செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியாகி, 40 நாட்கள் கடந்து விட்டது; பிரச்னை தீரவில்லை. வங்கிகளில், மக்கள் மணிக்கணக்கில் காத்து இருக்கின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனை மாற்றத்திற்கு வங்கிகள் தயாராகவில்லை. மக்கள் கஷ்டத்தை, மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதிருப்தி :
இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து தினமும் 2 மணி நேரம் சிந்தித்தும், இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய அரசு ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பை வெளியிட்ட போது, தெலுங்கு தேசக் கட்சி பெரிதும் வரவேற்றது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடு தற்போது அதிருப்தியை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary:
Vijayawada: In the case of the withdrawal bill, the federal government should take note that the pain the people of Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu said