சென்னை: முதல்வர் ஜெயலலிதா மறைவு மற்றும், ‛வர்தா' புயல் பாதிப்பால், பள்ளிகளின் வேலை நாட்கள் பாதிக்கப்பட்டன. இதனால், அரையாண்டு தேர்வுக்கு புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதா, டிச.,5ம் தேதி இரவு 11:30 மணிக்கு இறந்தார். இதன் காரணமாக, பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. டிச.,12ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், ‛வர்தா' புயல் தாக்கியது. இதன் காரணமாகவும், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களும், அரையாண்டு தேர்வு காலத்தில் நடந்ததால், பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, டிச.,7,8 ம் தேதிகளில் நடக்க இருந்த அரையாண்டு தேர்வுகள், ஜன.,3, 4ம் தேதிகளில் நடைபெறும்; டிச.,14ம் தேதி நடக்க தேர்வு ஜன.,5ம் தேதி நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
English summary:
CHENNAI: Chief Minister Jayalalithaa and death, "varta" storm damage, affected schools working days. Thus, the new date was announced half-yearly exams.