சென்னை: தமிழக தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சோதனை:
தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன ராவ், 58, வருமான வரித்துறை பிடியில் வசமாக மாட்டிக் கொண்டார். அவரது வீடு மற்றும் கோட்டையில் உள்ள, அவரது அலுவலகம் உட்பட, 12 இடங்களில், நேற்று வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அரசியல்வாதிகளின் கலெக்ஷன் ஏஜன்டாக, ராவ் செயல்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் நடந்த, இந்த சோதனையின் போது, பாதுகாப்பு பணியில், துணை ராணுவம் ஈடுபட்டது, அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நியமனம்:
இதனையடுத்து தலைமை செயலாளர் பதவியில் இருந்து ராம மோகன ராவ் நீக்கப்பட்டார். புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள கிரிஜா வைத்தியநாதன், தற்போது நில நிர்வாகத்துறை ஆணையராக உள்ளார்.
கிரிஜா வைத்தியநாதன், கடந்த 1981ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. சென்னை ஐஐடியில் படித்து, பட்டம் பெற்றவர். இவரது தந்தை வெங்கிட்டரமணன், ரிசர்வ் வங்கி கவர்னராக 1990 முதல் 1992 வரை இருந்தார். கடந்த 01.07.59ம் ஆண்டு பிறந்த கிரிஜா, நல வாழ்வு பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். மதுரை மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு அரசு துறைகளில் உயர் பதவிகள் வகித்தவர். தற்போது தலைமை செயலர் பொறுப்பு உள்பட, ஊழல ் கண்காணிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.
English summary:
Chennai: Tamil Nadu Chief Secretary has appointed Girija Vaidyanathan.