புதுடில்லி: ஊழலை ஒழிக்க காங்கிரஸ் கட்சி தவறி விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பார்லி., கூட்டம்:
பா.ஜ., பார்லிமென்டரி கூட்டம் இன்று காலை பார்லிமென்ட் வளாகத்தில் நடந்தது. பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது:
பாராட்டு:
ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் மக்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். டிஜிட்டல் பொருளாதாரம், மக்களுக்கு நல்ல வழி காட்டும். டிஜிட்டல் பொருளாதாரம் வெளிப்படையானது. திறமையானது. கடந்த 1998 ல் பினாமி சொத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சி வரைவு சட்டம் கொண்டு வந்தது. ஆனால், இதனை அமல்படுத்தி நடைமுறைப்படுத்த தவறிவிட்டது. ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக முன்னர் ஆதாரம் கேட்காத எதிர்க்கட்சிகள் தற்போது ஆதாரம் கேட்கிறது.
புறக்கணித்த இந்திரா:
முந்தைய காலங்களில் அரசின் ஊழல் மற்றும் முறைகேட்டை எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்தும். ஆனால் தற்போது எதிர்க்கட்சிகளின் முறைகேட்டை அரசு வெளிப்படுத்துகிறது. 2ஜி, நிலக்கரி ஊழல் என பல பிரச்னைகளில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள், கறுப்பு பணத்திற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராக நடவடிக்கைக்கு தற்போது ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஒன்றாக சேர்ந்துள்ளன. காங்கிரஸ், நாட்டை விட கட்சி பெரியது என நினைக்கிறது. பா.ஜ.,வை பொறுத்தவரை நாட்டு நலனே முக்கியமானது. ஊழலை ஒழிக்க காங்., தவறி விட்டது. இந்திராவிடம் ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து வாங்கூ குழு அறிக்கை அளித்தது. ஆனால், அதனை அவர் புறக்கணித்து விட்டார். ரூபாய் நோட்டு வாபசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள் தான் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. கறுப்பு பணம் அனைத்தும் செல்லதாகிவிட்டது என்றன.
English Summary:
New Delhi: The Congress party has failed to eradicate corruption, Modi said.