புதுடில்லி: எந்த விவாதமும் நடத்தாமல் ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டதற்கு அவைத்தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஹமீத் அன்சாரி கவலை தெரிவித்துள்ளார்.
ஒத்திவைப்பு:
ரூபாய் நோட்டு வாபசால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், ராஜ்யசபா தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இன்றும் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக ராஜ்யசபா காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர், போஸ்டர்களை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஜனாதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
கவலை:
241வது கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று நிறைவு உரையாக அன்சாரி பேசியதாவது: கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த 221வது கூட்டத்தில் நான் பேசியதை திருப்பி பேசக்கூடாது என நம்பிக்கையுடன் இருந்தேன். தொடர்ச்சியான மற்றும் வழக்கமான இடையூறுகள் இந்த தொடரை பாதித்தது. சுமூகமாக பார்லிமென்ட் நடத்துவதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் கைவிடப்பட்டுள்ளது. கோஷம் எழுப்புவது, போஸ்டர்களை காண்பிப்பது, தொடருக்கு இடையூறு செய்வது தொடர்பான விதிகளை எந்த கட்சிகளும் பின்பற்றவில்லை. இடையூறு, போராட்டம், கருத்து வேறுபாடுகள் இடையிலான வேறுபாட்டை அனைத்து கட்சிகளும் புரிந்து கொண்டு அதனை பின்பற்ற வேண்டும் எனக்கூறினார்.
English Summary:
New Delhi: Rajya Sabha without any debate postponed vice president Hamid Ansari expressed his concern.