சென்னை: முதல்வர் ஜெயலலிதா மறைவினால், கடும் அதிர்ச்சியில் இருந்த தமிழக மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து வழக்கமான நிலைக்கு திரும்பியுள்ளது.
திரும்பும் இயல்புநிலை:
மூச்சு திணறல் பாதிப்பால், செப்.,22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, 74 நாள் சிகிச்சைக்கு பின், டிச., 5ம் தேதி இரவு, 11.30 மணிக்கு காலமானார். அன்று மாலை முதலே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. கடைகள் அனைத்து அடைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து ஸ்தம்பித்து போனது.
நேற்றும் இதே நிலை நீடித்தது.நேற்று மாலை, முதல்வர் ஜெயலலிதா உடல் மெரீனா கடற்கரையில், எம்.ஜி.ஆர்., நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு தான் தமிழக மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீட்டனர். இன்று காலை முதல் கடைகள் திறக்கப்பட்டன. காலை, 9:30 மணிக்கு பிறகு பஸ் போக்குவரத்தும் துவங்கியது. வாகன போக்குவரத்து மீண்டும் துவங்கி, தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
English Summary:
Chief Minister Jayalalithaa after death and in severe shock the people are back to normal. Traffic returns to normal in most parts of the state.