புதுடெல்லி : எழுத்தாளர் வண்ணதாசனுக்கு 2016-ம் ஆண்டு சிறந்த தமிழ் மொழி படைப்பாளருக்கான சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வண்ணதாசனுக்கு விருது:
இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதினை வழங்கி வருகிறது. இந்நிலையில், 2016ம் ஆண்டில் சிறந்த தமிழ் படைப்பிற்கான விருது வண்ணதாசனின் ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் படைப்பாளர்:
எழுத்தாளர் வண்ணதாசன், கல்யாண்ஜி என்ற பெயரில் எழுதி வருகிறார். வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வண்ணதாசனின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம் . இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன்.
வண்ணதாசன் படைப்புகள் விவரம் பின்வருமாறு:
1.சிறுகதைத் தொகுப்புகள்:-
கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, கனிவு, நடுகை, உயரப் பறத்தல், கிருஷ்ணன் வைத்த வீடு, ஒளியிலே தெரிவது (உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2011ஆம் ஆண்டில் சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்றது), சில இறகுகள் சில பறவைகள்
2. புதினங்கள்:-
சின்னு முதல் சின்னு வரை.
3.கவிதைத் தொகுப்புகள்:
புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு, கட்டுரைகள் - அகமும் புறமு
ம்.
4.கடிதங்கள்:-
வண்ணதாசன் கடிதங்கள்.
English Summary:
New Delhi: In the year 2016 the writer Vannadasan Sahitya Academy Award for Best Tamil Language Creator notified.