புதுடில்லி : கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கறுப்பு பணம் பதுக்கியவர்களிடம் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அடுத்த கட்டமாக வரி ஏய்ப்பு செய்வோர் மீது கவனத்தை திருப்ப வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
ஐடி.,யின் அடுத்த 'செக்' :
2014 - 15 ம் நிதியாண்டில் அதிக மதிப்புடைய பண பரிவர்த்தனை செய்த 67.54 லட்சம் பேரை வருமான வரித்துறை அடையாளம் கண்டுள்ளது. இவர்களில் 2015 - 16 ம் ஆண்டில் வருமான வரியை முறையாக செலுத்தாதவர்களிடம் விரைவில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிக பண பரிவர்த்தனை செய்தவர்கள் மற்றும் வரி செலுத்தாதவர்கள் பற்றிய விபரங்களை வங்கிகள் மற்றுள் இதர நிதித்துறை அமைப்புக்களிடம் இருந்து வருமான வரித்துறை பெற்றுள்ளது.
இனி ஏமாற்ற முடியாது :
வருமான வரித்துறை, முதல்கட்டமாக தங்களின் பட்டியலில் உள்ள 67.54 லட்சம் பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி வருகிறது. பண பரிவர்த்தனை விபரங்களை காட்டவும் கேட்டுள்ளது. இது தவிர வருமான வரி செலுத்துவோர் அனைவரும் தங்களின் உண்மையான வருமானத்தை தெரிவிக்கிறார்களா, அதற்கான சரியான வரியை செலுத்துகிறார்களா எனவும் நேரடி வரி விதிப்பு கழகம் மூலம் ஆய்வு ஒன்றும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 760 க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.3590 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3589 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது.
English Summary:
For the past few days to the Income Tax department raided across the country have stashed black money. The next step is to draw attention to the Income Tax department has decided to do with tax evasion.