டேராடூன் : உத்தர்கண்டில் திருவள்ளுவர் சிலை இன்று மீண்டும் நிறுவப்பட உள்ளது.
சிலை நிறுவ எதிர்ப்பு :
தமிழகத்தின் நாமக்கல்லில் வடிவமைக்கப்பட்ட 12 அடி உயர திருவள்ளுவர் சிலை, உத்தரகண்டில் கடந்த ஜூன் 30-ம் தேதி நிறுவப்பட்டது. இதற்கு சாதுக்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சிலையை பிளாஸ்டிக் பையில் போட்டு கயிற்றால் கட்டி தரையில் போட்டு வைத்தனர். இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து வேறு இடத்தில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டிருந்தது.
அரசு விழா :
இந்நிலையில் திருவள்ளுவர் சிலை இன்று(டிச.,19) மாலை 5 மணி அளவில் மீண்டும் நிறுவப்பட உள்ளது. அரசு விழாவாக நடக்க உள்ள இந்நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்துவைக்க உள்ளதாக உத்தரகாண்ட் மாநில தமிழ் சங்கம் தெரிவித்துள்ளது
English Summary:
Dehradun: Uttarakhand Thiruvalluvar statue is being established again today.