சென்னை;டி.என்.பி.எஸ்.சி.,க்கு, 11 புதிய உறுப்பினர்களை நியமித்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.,க்கு, 11 புதிய உறுப்பினர்களை நியமித்து, ஜன., 31ம் தேதி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., முன்னாள்எ ம்.பி.,யான டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த மனு: கடந்த, மூன்று ஆண்டுகளாக, டி.என்.பி.எஸ்.சி.,க்கு உறுப்பினர்களை நியமிக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சி காலம் முடிவதற்கு, இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், உறுப்பினர்கள்அவசர கதியில் நியமிக்கப்பட்டு உள்ளனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனத்தின்போது, தகுதி, திறமையை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால், ஆளுங்கட்சி மற்றும் முதல்வரின் விசுவாசிகளை நியமித்து உள்ளனர். உறுப்பினர் நியமனத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை. எனவே, '11 உறுப்பினர்களின் நியமனம், சட்டவிரோதமானது' என, உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதே போன்ற மனுக்களை சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பின் தலைவர், கே.பாலு, புதிய தமிழகம் கட்சி தலைவர், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரும் தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 11 பேர் நியமனத்தை ரத்து செய்து, இன்று உத்தரவு பிறப்பித்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி ராமலிங்கம் பெயரை மீண்டும் பரிசீலனை செய்யக்கூடாது எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் நியமனை அரசாணை ரத்து செய்யப்படுவதாக கூறினர்.
English summary:
Chennai; Tienpiesci, to appoint 11 new members, the Madras High Court has quashed the order of the State Government. Tienpiesci, to appoint 11 new members, Jan., 31, the government gave the order.