வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய வெளியுறவுச் செயலாளராக எக்ஸான் மொபில் நிறுவனத்தின் சிஇஒ டில்லர்சனை ட்ரம்ப் நியமித்ததாக செய்தி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய வெளியுறவு செயலர்:
எக்சான் மொபில்' நிறுவனத்தின் சிஇஒ ரெக்ஸ் டில்லர்சனை அமெரிக்காவின் புதிய வெளியுறவு செயலாளராக ட்ரம்ப் நியமித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், ரஷ்ய அதிபர் புதினுடன் எக்சாஸ் மொபில் நெருங்கிய தொடர்பில் உள்ளது. எனவே அந்த நிறுவனத்தின் சிஇஒ வை வெளியுறவு செயலளாராக நியமித்திருப்பதை உறுதிப்படுத்துவதில் அமெரிக்க மேலவைக்கு சிரமம் உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளன.
கவர்னர் மிட் ரூம்னி பேட்டி:
இது குறித்து வெளியுறவு செயலாளருக்கான பதவிக்கு முக்கிய போட்டியாளராக இருந்த மசாசூசெட்ஸ் நகரத்தின் கவர்னர் மிட் ரூம்னி கூ றியபோது,
"அமெரிக்கா போன்ற சிறந்த நாட்டின் வெளியுறவு செயலளருக்கான பதவிக்கு நானும் பரிந்துரைக்கப்பட்டது மிகுந்த பெருமைக்குரிய ஒன்று. அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப்புடனான எனது சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அமெரிக்காவின் புதிய வெளியுறவு செயலாளர் நாட்டை வலிமை அடையும் செயல்களை முன்னெடுப்பார் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
கடந்த வாரம் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ட்ரம்ப், எக்சாஸ் மொபில் நிறுவனத்தி சிஇஒ டில்லர்சனை புகழ்ந்து பேசியிருந்தார். எனவே அவரைதான் அமெரிக்க வெளியுறவு செயலாளராக ட்ரம்ப் நியமிப்பார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த நிலையில் டில்லர்சனை அமெரிக்க வெளியுறவு செயலாளராக ட்ர்மப் நியமித்துள்ளார் என தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
ஒபாமாவின் அமைச்சகத்தில் நான்கு வருடங்களாக வெளியுறவு செயலாளராக இடம்பெற்றிருந்த ஜான் கெர்ரியின் பதவி காலம் இந்த ஆண்டுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.
English Summary : Tillarcanai appointed Foreign Secretary Donald Trump.
Washington: America's new foreign secretary tillarcanai Trump appointed the CEO of Exxon-Mobil, the American press reported the news.
The new foreign secretary:
Exxon Mobil, "the company's CEO Rex tillarcanai the appointment of the new US Secretary of State, the US press reported that the Trump.
Meanwhile, Russian President Putin is in close contact with the ekcas Mobil. So the CEO of the Foreign Secretary's nomination to the US Senate to the difficulty in ensuring that the US media have said.