சென்னை: வங்க கடலில் அந்தமான் அருகே புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று கூறியதாவது:
தென் வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்று அழுத்த மண்டலம் விசாகப்பட்டினத்திற்கு தெற்கே, 1,280 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்று அழுத்த மண்டலமாகவும், அதற்கு அடுத்த, 24 மணி நேரத்தில் புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது.
இது, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. அதன் நிலை, நகரும் தன்மையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
மழை வாய்ப்பு:
தென் தமிழகத்தின் கடலோர பகுதியின் வளி மண்டலத்தின் கீழ்அடுக்கில், மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அவ்வப்போது லேசான மழை பெய்யும்.
வங்க கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருந்தாலும் தற்போது அது தமிழகத்தில் இருந்து 1,000 கி.மீ., தொலைவில் உள்ளதால், மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை.
இவ்வாறு பாலசந்திரன் கூறினார்.

English Summary:
Chennai: Bengal and Andaman Sea is likely to become a symbol of the storm, according to Meteorological Centre, Chennai. Chennai Meteorological director Balachandran said tonight: