புதுடில்லி: பழைய ரூ.500 நோட்டுகள் டிசம்பர் 15ம் தேதிக்கு பிறகு எங்கும் செல்லாது எனவும், வங்கியில் மட்டுமே டிபாசிட் செய்ய முடியும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கவும் கடந்த நவம்பர் மாதம் 8 ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன. இருப்பினும், பெட்ரோல் நிலையங்கள், குடிநீர் வரி, சொத்து வரி, மருந்து வாங்க, ரயில் டிக்கெட் வாங்க உள்ளிட்டவைகளுக்கு பழைய ரூ.500 நோட்டுகள் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்த கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல் பங்குகள் மற்றும் ரயில் டிக்கெட் வாங்க ரூ.500 நோட்டு பயன்பாடு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நாளை இரவுடன்(டிசம்பர் 15ம் தேதி) பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் கூறுகையில், பழைய ரூபாய் நோட்டுகள் பயன்படுத்த அளிக்கப்பட்டிருந்த விலக்க நாளை இரவு 12 மணியுடன் முடிவடைகிறது என்றார். இதன் மூலம், மருந்து கடைகள், மின் கட்டணம், குடிநீர் கட்டணம் கட்ட பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்த முடியாது. பழைய ரூ.500 நோட்டுகளை வங்கிகளில் மட்டுமே செலுத்த முடியும். டிஜிட்டல் முறையை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary:
NEW DELHI: The old banknotes of Rs 500 on December 15, will not go anywhere after that, the federal government announced that the bank not only can be done by depositing