திருச்சி: திருச்சி துறையூர் அருகே நடந்த வெடி விபத்தில், 19 பேர் உயிர் இழந்த வழக்கில், வெடிமருந்து தொழிற்சாலையின் இயக்குநர் உட்பட, ஐந்து பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.
19 பேர் பலி:
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, முருங்கப்பட்டியில் இயங்கி வந்த தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில், டிச., 1ம் தேதி திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 19 பேர் உயிர் இழந்தனர்.
இந்த வெடி விபத்து வழக்கு, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. எஸ்.பி., ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், வெடிமருந்து தொழிற்சாலையின் சிவில் இன்ஜினியர் பிரகாசம், திட்ட இயக்குனர் ராஜகோபால், ராஜ மணிகண்டன், கணேஷ், வேங்கடபதி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்துடன் ஆலை உள்ள முருங்கப்பட்டியில் உள்ள நான்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன
English Summary:
Tiruchirapalli Thuraiyur in the vicinity of the blast, 19 people were killed in the case, including the director of the gunpowder factory, CB-five people, police said.