சென்னை: சுனாமி தாக்குதல் நடந்து, 12 ஆண்டுகள் கடந்ததை ஒட்டி, சென்னை மெரினாவில் இன்று ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை மெரினாவில்.,
சென்னை, நாகப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை, 2004 டிச.,26ல், சுனாமி எனப்படும் பேரலைகள் தாக்கின. இதில், ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். ஏராளமான பொருட் சேதம் ஏற்பட்டது. சுனாமி தாக்குதல் நடந்து, 12 ஆண்டுகள் கடந்ததை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில், இன்று காலை ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். மக்கள், மெழுகுவர்த்திகளை ஏந்தியும், கடலில் பால் கொட்டியும் அஞ்சலி செலுத்தினர். நாகப்பட்டினம் புதுக்கோட்டை, உள்ளிட்ட பிற கடற்கரை பகுதிகளிலும், ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. ஜெகதாபடட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதியில் 3500 மீனவர்கள் தங்களின் பணிக்கு செல்லவில்லை. 1500 படகுகள் நிறுத்தப்பட்டன. பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
English Summary:
Chennai: Tsunami attack, cling to the past 12 years, thousands paid tribute today to the Marina.