புதுடில்லி:வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று, வெளிநாட்டுக்கு தப்பிய, தொழிலதிபர், விஜய் மல்லையாவின், 'டுவிட்டர், இ - மெயில்' கணக்குகள், மர்ம நபர்களால் முடக்கப்பட்டு உள்ளன.
கர்நாடகாவில், காங்கிரசைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். இம்மாநில தலைநகர், பெங்களூரைச் சேர்ந்தவர், விஜய் மல்லையா. மதுபான ஆலை மற்றும் விமான போக்குவரத்து நிறுவனம் நடத்திய மல்லையா, எஸ்.பி.ஐ., உள்ளிட்ட வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று, பிரிட்டனுக்கு தப்பியோடினார்.
தற்போது, லண்டன் நகரில், தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். மல்லையா, இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இந்நிலையில், தன், 'டுவிட்டர், இ - மெயில்'
கணக்குகளை, மர்ம நபர்கள் முடக்கியுள்ளதாக, மல்லையா கூறியுள்ளார்.
மல்லையா கூறியதாவது:
நான் பயன்படுத்தும், 'டுவிட்டர், இ - மெயில்' கணக்குகளை முடக்கியுள்ளனர். டுவிட்டரில், என் சொந்த விஷயங்கள், வங்கிக் கணக்கு விபரங்கள், அவற்றின் பாஸ்வேர்டுகள், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு உள்ளனர். மேலும், பல விஷயங்களை பகிரங்கப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English Summary:
Banks, loans worth Rs 9,000 crore have escaped abroad, businessman Vijay Mallya, Twitter, e - mail 'accounts, are crippled by unidentified persons.