நகரி - தெலுங்கானாவில் தொழிலாளர்களின் தீவிர பணியால் 36 மணி நேரத்தில் 820 கழிப்பறைகள் கட்டப்பட்டது. 90 நாளில் ஜாகித் யாலா மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு திட்டம்:
நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்ட வேண்டும் என்று மத்திய அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தீவிர கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டது. ஜாகித்யாலா மாவட்ட கலெக்டர் சரத் தசை மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுத்தார்.
820 கழிப்பறைகள் கட்ட...
அதன்படி விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 36 மணி நேரத்தில் 820 கழிப்பறைகள் கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. மேஸ்திரிகள், கூலி தொழிலாளர்கள், கட்டுமான பொருட்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து நடிக்குடி கிராமத்தில் கலெக்டர் சரத், கழிப்பறைகள் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். அதே நேரத்தில் மற்ற கிராமங்களில் கழிப்பறைகள் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அனைத்து வீடுகளிலும்....
கலெக்டர் ஒவ்வொரு கிராமமாக சென்று கழிப்பறை கட்டும் பணியை பார்வையிட்டார். தொழிலாளர்களின் தீவிர பணியால் 36 மணி நேரத்தில் 820 கழிப்பறைகள் கட்டப்பட்டது. 90 நாளில் ஜாகித் யாலா மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
English Summary:
Nagare - up to 36 hours of intensive work in Telangana workers built 820 toilets. In the 90-day target jakit Jaala district is to build houses and toilets