உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள ஜீஞ்சக் நகரில், இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமையும் வங்கியில் வரிசையில் காத்திருந்த சர்வேஷா(30) என்ற பெண்ணுக்கு நிகழ்ந்த பிரசவத்தில், பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து அந்தப் பெண்ணின் மாமியார், தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது:
எனது மகன் கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்த ஒரு விபத்தில் இறந்து விட்டார். அவரது உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு அறிவித்திருந்தது. அதன் முதல் தவணையாக ரூ.2.75 லட்சத்தைப் பெறுவதற்காக, கடந்த வியாழக்கிழமை (டிச.1) வங்கியின் முன்னால் வரிசையில் நின்றோம்.
அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால், பணத்தைப் பெற முடியவில்லை. அதனால், இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமையும் வரிசையில் காத்திருந்தோம். அப்போது, மாலை 4 மணி அளவில், என் மருமகள் சர்வேஷாவுக்குப் பிரசவ வலி எடுத்தது. அதையடுத்து அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
எனினும், சர்வேஷாவின் அலறல் காரணமாக, அவர் இறந்து விடுவார் என்று பயந்தேன். வங்கி இருந்த இடத்துக்கு அவசரக்கால ஊர்தியால் வர முடியாததால், அங்கு போலீஸார் வந்து, சர்வேஷாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. சர்வேஷாவின் உடல்நிலை முதலில் சற்று நலிவடைந்தாலும், மருத்துவமனையில் அவர் குணமடைந்து விட்டார் என்று அவரது மாமியார் தெரிவித்தார்.
English Summary : UP : Bank in line waiting for a woman in childbirth. Uttar Pradesh, Kanpur tehat jincak city in the district, waiting in line at the bank for a second day Friday carvesa (30), a woman on the birth of a baby girl was born.