லக்னோ,(.உ.பி) - உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பாவும் ஆளும் சமாஜ் வாதி கட்சித்தலைவர்களில் ஒருவருமான சிவ்பால் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்வில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங்கின் சமாஜ் வாதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். அடுத்த ஆண்டு அந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற வேண்டும் என பா.ஜ.க., காங்கிரஸ் , மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தீவிரப்பிரச்சாரத்தை துவக்கியுள்ளன.
இந்த நிலையில் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பா சிவ்பாலுக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. இந்த விரிசல் பொது நிகழ்ச்சிகளிலும் , தொண்டர்கள் முன்னிலையிலும் வெடித்துள்ளது. இதனால் முலாயம் சிங் அதிர்ச்சி அடைந்துள்ளார். தற்போதைய நிலையில் சமாஜ் வாதிக்குள் மோதல் நீடித்தால் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது . கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என முலாயம் சிங் எச்சரித்தார். இருப்பினும் அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்களை சிவ்பால் புறக்கணிப்பதும், சிவ்பாலின் ஆதரவாளர்களை அகிலேஷ் யாதவ் புறக்கணிப்பதும் தற்போது சமாஜ் வாதி கட்சியில் காணப்படுகிறது.இதனால் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
கடந்த 24ம் தேதியன்று அகிலேஷ் யாதவ் கட்சி எம்.எல்.ஏக்களை தனியாக சந்தித்து அவர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக உறுதியளித்துள்ளார். சிவ்பால் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்துள்ள நிலையில் அவருக்கு போட்டியாக முதல்வர் அகிலேஷ் யாதவும் 403 வேட்பாளர்கள் பட்டியலை வைத்துள்ளார்.சமாஜ் வாதி கட்சிக்குள் நடக்கும் மோதல் விவகாரத்தால் தங்களுக்கு தேர்தலில் சாதகமான பலன்கள் கிடைக்கும் என காங்கிரசும், பா.ஜ.கவும் நம்பிக்கை கொண்டுள்ளன.
English Summary:
Lucknow, (., UP) - Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav and his uncle and one of the leaders of the ruling Samaj civp plaintiff, the confrontation between the great crisis has resulted in the selection of candidates to the legislative elections. Plaintiff Samaj Party in Uttar Pradesh, Mulayam Singh's rule.