லக்னோ : உ.பி., அரசு சிறுபான்மையினர் உரிமைகள் தினம் கடைப்பிடிப்பது வெறும் கண்துடைப்பு நாடகம் என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தலுக்காக நாடகம் :
இதுகுறித்து லக்னோவில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உ.பி., முன்னாள் முதல்வருமான மாயாவதி தெரிவித்ததாவது: உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ், சிறுபான்மையினர் தினம் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, நாடகம் நடத்துகிறார்; முதலில் அவர், பா.ஜ.,வுடனான, ரகசிய கூட்டணியை முறிக்க வேண்டும். சிறுபான்மை மக்களின் நலனுக்காக எதுவும் செய்யாமல், தற்போது தேர்தலுக்காக, அவர்களின் நலன் பற்றி அகிலேஷ் பேசுகிறார்.
வன்முறை சம்பவங்கள்:
அகிலேஷின் இந்த கண் துடைப்பு நடவடிக்கையால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் முசாபர்நகர் கலவரம் உட்பட 400க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்துள்ளன. இச்சம்பவங்களுக்காக சமாஜ்வாதி கட்சி நினைவு கூரப்படும். பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
Lucknow: The Uttar Pradesh government's adherence to the rights of minorities as a whitewash, Mayawati accused the play.