
ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பல்கேரியாவில் படப்பிடிப்பில் உள்ள நடிகர் அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாண்புமிகு புரட்சித் தலைவி டாக்டர் அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் சக தமிழ் நாட்டு மக்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அவரது பிரிவால் வாடும் எனக்கும், எண்ணற்ற என் சக தமிழ் மக்களுக்கும் இந்தப் பிரிவைத் தாங்கும் வல்லமைைத் தர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஆழ்ந்த வருத்தத்துடன்
அஜித் குமார்
English summary:
Actor ajityh Kumar has conveyed his deep condolences to the demise of CM Jayalalithaa