புதுடெல்லி : சுவிட்சர்லாந்து அரசு அறிவித்த கறுப்புப்பணம் பதுக்கியவர்கள் பட்டியலை வெளியிடாதது ஏன் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
கர்நாடக மாநிலம் பெல்காவியல் நகரில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
இந்திய வரலாற்றில் முதல் முறையாக பிரதமரே நாட்டில் உள்ள ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளார். நாட்டு மக்களுக்காக அனைவரும் பணியாற்றுவார்கள். ஆனால் பிரதமர் மோடியோ நமது நாட்டு பொருளாதார அமைப்பு மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாடு முழுவதும் இதுவரை 100 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ இறப்புக்கு அஞ்சலி செலுத்த பாராளுமன்றத்தில் 2 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆனால் ரூபாய் நோட்டு விவகாரத்தில் இறந்த அப்பாவி மக்களுக்காக ஒரு நிமிடம் கூட பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட வில்லை.
தங்கள் நாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய நபர்களின் பட்டியலை மத்திய அரசிடம் சுவிட்சர்லாந்து அளித்தது. ஆனால் அந்த பட்டியல் விவரங்களை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வலியுறுத்துகிறது. ஆனால் , பிரதமர் மோடி அந்த பட்டியலை பாதுகாப்பது ஏன்?
லண்டனில் இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையா,ஐ.பி.எல். போட்டியின் முன்னாள் தலைவர் லலித் மோடி ஆகியோரை இந்தியாவிற்கு கொண்டு வராதது ஏன்? இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
English summary:
New Delhi: Government of Switzerland declared that the Congress vice-president Rahul Gandhi black money hoarded questioned why Unreleased list.