லக்னோ: வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் யாருக்கு எந்த தொகுதி, எத்தனை தொகுதி என பங்கு போட்டு பிரித்து கொள்வதில் சமாஜ்வாடி கட்சிக்குள் குடும்ப மல்லுக்கட்டு துவங்கியிருக்கிறது.
உ.பி., மாநில முதல்வர் முலாயமின் மகன் அகிலேசுக்கும் அவரது சித்தப்பாவுக்கும் இடையே யாருக்கு அதிகாரம் என்ற முட்டல், மோதல் கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது. சிவ்பால் ஆதரவு அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். கட்சி பதவிகள் சிலருக்கு பறிக்கப்பட்டது. கட்சியின் கூட்டத்தில் இருவரும் மாறி, மாறி தாக்கி பேசியதும், இதனை தொடர்ந்து இரு தரப்பு ஆதரவாளர்களும் சில இடங்களில் மோதிக்கொண்டனர். இதனையடுத்து அகிலேஷ் பதவி பறிக்கப்படுமா என்றபரபரப்பு ஏற்பட்டது.
முலாயமிடம் பட்டியல்:
தற்போது வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தங்களின் ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி கொடுப்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர். மொத்தம் உள்ள 404 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் தயாரித்து கொடுத்துள்ளார். இது போல் சிவ்பால் யாதவ் தனது ஆதரவாளர்களுக்கான 175 பேர் கொண்ட பட்டியலை முலாயமிடம் வழங்கியுள்ளார். இதில் முலாயம் எடுக்கும் முடிவை பொறுத்து இரு தரப்பினர் இடையே மேலும் மோதல் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English summary:
Lucknow: The coming Assembly elections in any constituency to whom, how to divide the volume, put the role of the family in the Samajwadi Party has begun fighting.