கொங்கு மண்டலத்தில், 100 தனியார் பஸ்களை, வழித்தட அனுமதியுடன், 10 மடங்கு கூடுதல் விலை கொடுத்து வாங்கிய, வி.ஐ.பி.,க்கள் குறித்தும், பஸ்களை விற்றவர்கள் பட்டியலை தயார் செய்தும், சி.பி.ஐ., கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில், மத்திய அரசு, நவ., 8 முதல் பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாதென அறிவித்தது. இதனால், கோடிக்கணக்கில் பணத்தை குவித்து வைத்திருந்த, வி.ஐ.பி.,க்கள் பலர், அதை மாற்றும் வகையில், பல்வேறு தொழில்களில் முதலீடு செய்தனர். அந்த வகையில், மாம்பழத்துக்கும், முட்டைக்கும் பெயர் பெற்ற ஊர்களைச் சேர்ந்த இரு, வி.ஐ.பி.,க்கள், தங்களின் கறுப்புப் பணத்தை, தனியார் பஸ்கள், அவற்றின் வழித்தடங்கள் மீதும் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில், 100 தனியார் பஸ்கள், வழித்தட அனுமதியுடன் வாங்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் தற்போது, பஸ் வழித்தட அனுமதிக்கு, அரசு, 20 லட்சம் ரூபாய் நிர்ணயித்துள்ளது.
ரூ.1,000 கோடிக்கு மேல் :
இந்நிலையில், இயக்கப்படும் பஸ்சின் நிலையை பொறுத்து, ஒரு பஸ், வழித்தடத்துடன், 1.50 கோடி ரூபாய் முதல், 2.50 கோடி ரூபாய் வரை, மார்க்கெட் விலையாக உள்ளது. ஆனால், பணப்புழக்க கெடுபிடி காரணமாக, ஒரு வழித்தடம் மற்றும் பஸ்சை, 10 கோடி ரூபாய் கொடுத்து, இரண்டு, வி.ஐ.பி.,க்கள் வாங்கி குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அந்த வகையில், 100 பஸ்கள், வழித்தடத்துடன், 1,000 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளன. இது குறித்து, மத்திய உளவுத் துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களுக்கு உட்பட்ட, 23 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், நவ., 8க்கு பின், கை மாறிய தனியார் பஸ்கள் குறித்த பட்டியலை தயார் செய்துள்ளனர்.
கறுப்பு பணம் பதுக்கல் :
இதில், சேலம், திருச்செங்கோடு, ஈரோடு, சங்ககிரி, கோவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், 88 தனியார் பஸ்கள் கை மாறி உள்ளன. சேலம் மாநகரில், எட்டு தனியார் பஸ்களை, ஒரே நிறுவனம் வாங்கி உள்ளது. கொங்கு மண்டலத்தில், 88 பஸ்கள், முறையாக உரிமையாளர் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 12 பஸ்கள் மட்டும் உரிமையாளர்களின் பெயர் மாறாமல் இருப்பது தெரிய வந்துஉள்ளது. இந்த பஸ்களை வாங்கிய வர்கள், விற்பனை செய்தவர்கள் குறித்து பட்டியல் தயாரித்துள்ள, சி.பி.ஐ., பணத்தை எந்த வகையில் முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்து, தீவிர விசாரணையை துவக்கி உள்ளது.சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி, வி.ஐ.பி.,க்கள் இருவரையும், தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது. இது, தனியார் பஸ் உரிமையாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மத்தியில், பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: கொங்கு மண்டலத்தில், ஆளுங்கட்சி, வி.ஐ.பி.,க்கள் இருவர், பழைய ரூபாய் நோட்டுகளை வைத்து, 100 தனியார் பஸ் வழித்தடங்கள், 10 சேகோ பேக்டரிகளை வாங்கி குவித்து உள்ளனர். இவர்களின் கறுப்புப் பண பதுக்கல் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், எந்நேரத்திலும், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தனியார் பஸ் உரிமையாளர்களை குறி வைத்து, 'ரெய்டு' நடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Kongu region, 100 private buses, transit permits, and 10 times more costly, VIP, PES, about the buses will prepare a list of sellers, CBI has intensified surveillance.