புதுடெல்லி - ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக வி ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நியூயார்க் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் ஆச்சார்யா நியமனத்திற்கு மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித்தது. ஆச்சா
ர்யா மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார். ஐஐடி மும்பையின் முன்னாள் மாணவரான வைரல் வி ஆச்சர்யா 1995 ஆம் ஆண்டு பி.டெக் பட்டமும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நிதியியல் பிரிவில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இங்கிலாந்திலும் கல்வியில் துறை தொடர்பாக பல்வேறு பொறுப்புகளையும் 2001 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை வகித்துள்ளார். பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரிசர்வ் வங்கி மீது கடும் விமர்சனம் முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்த சவாலான சூழலில் துணை கவர்னராக வைரல் வி. ஆச்சார்யா நியமிக்கப்பட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
English Summary:
New Delhi - VS Acharya has been appointed as Deputy Governor of the Reserve Bank announced the federal government. Professor of economics at New York University who has been working in the Employment Committee of the Cabinet has approved the appointment of Acharya. Acharya will stay in this position for three years.