மக்கள் நல கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., விலகியதற்கு, விஜயகாந்த தரப்பு மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வைகோ விலகினால், விஜயகாந்த ஏன் சந்தோஷப்பட வேண்டும் என்ற புரியாத கேள்வியுடன், தே.மு.தி.க., மாநில நிர்வாகி ஒருவரிடம் விசாரித்தோம்.
அவர் கூறியதாவது:
தே.மு.தி.க.,வின் ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலத்தையும் சிதைத்ததில், வைகோவுக்கு மிகப் பெரிய பங்கிருக்கிறது என்பதுதான், கட்சியினர் அவ்வளவு பேரின் தெளிவான முடிவு. கட்சியின் தலைவராக இருக்கும் விஜயகாந்த் மட்டும் இதிலிருந்து எப்படி மாறுபடுவார்? எல்லோரைக் காட்டிலும் பாதிப்பு அவருக்குத்தானே அதிகம்?2016ல் சட்டசபை தேர்தலில் தேமுதிகவை பா.ஜ.,வினர் தேடி வந்தனர். வருந்தி வருந்தி கூட்டணிக்கு அழைத்தனர். ஆனால், விஜயகாந்த் விதித்த சில நிபந்தனைகளை ஏற்க மறுத்து விட்டனர். இதனால், பா.ஜ., கூட்டணியில் இணைய விஜயகாந்துக்கு விருப்பம் இல்லை. அதேபோல, தி.மு.க.,வும், விஜயகாந்தை கூட்டணியில் இணைத்துக் கொள்ள பிரயாசைப்பட்டது. தி.மு.க., கூட்டணியில் இணைந்திருந்தால், எப்படியும் 40 எம்.எல்.ஏ.,க்கள் தே.மு.தி.க.,வுக்கு கிடைத்திருப்பார்கள். தி.மு.க., கட்டாயம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும். சந்தர்ப்பம் வாய்த்திருக்குமானால், தே.மு.தி.க., கூட்டணி ஆட்சிக்கு வற்புறுத்தி, ஆட்சி அதிகாரத்திலும் பங்கெடுத்திருக்கலாம்.
விஜயகாந்தை பின்னணியில் இருந்து தூண்டியவர் வைகோதானே? நீங்கள் மக்கள் நல கூட்டணிக்கு வாருங்கள்; உங்களை முதல்வர் வேட்பாளர் ஆக்குகிறோம். மக்கள் நல கூட்டணி ஊழல் இல்லாத அணி. இந்த அணிக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருக்கிறது என்று சொல்லி, மக்கள் நல கூட்டணி பக்கம் இழுத்து சென்றவர் வைகோ.சொன்னபடியே, 124 சீட்களை கூட்டணியில் விட்டுக் கொடுத்தனர்; முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்தனர். ஆனால், மக்களிடம் போணியாகாத மக்கள் நல கூட்டணியால், எதுவும் செய்ய முடியவில்லை. விஜயகாந்த் என்ற மூன்றாவது சக்தியை, 6 சதவீத ஓட்டுக்களில் இருந்து 2 சதவீத ஓட்டாக சுருக்கியதான் மிச்சம். கட்சியின் ஒட்டுமொத்த எதிர்காலமும் இன்று கேள்விக்குறியாகி விட்டது.
வைகோவின் பேச்சை நம்பி, மக்கள் நல கூட்டணியில் இணைந்த விஜயகாந்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்க, நினைத்த அசைன்மெண்ட்டை செய்து முடித்த திருப்தியில் இருந்த வைகோ என்ன சொன்னார் தெரியுமா? மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்திருக்கக்கூடாதாம். அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததாலேயே, கூட்டணிக்கு தோல்வி ஏற்பட்டு விட்டது போல கருத்து சொல்லத் துவங்கினார். இல்லையென்றால் மட்டும், கூட்டணி ஆட்சியை பிடித்திருக்குமா?
எல்லா பிரச்னைகளும் வைகோவால் விளைந்தது. ஆனால், தோல்விக்கு காரணம் விஜயகாந்த என்பது போல அவர் கருத்து சொன்னதும், விஜயகாந்தும் குடும்பத்தினரும் கொதித்து போனார்கள். கடுமையாக் ரியாக்ட் செய்ய வேண்டும் என்று புறப்பட்ட குடும்பத்தினரை, விஜயகாந்த்தான் கட்டுப்படுத்தினார். வைகோ மீதான அந்த ஆத்திரம் குமுறலாக விஜயகாந்த் மற்றும் கட்சியினரிடம் தொடர்ந்து இருந்து வந்தது.
தற்போது மக்கள் நல கூட்டணியில் பிளவு ஏற்பட்டு, வைகோ அதில் இருந்து விலகினார் என்றதும், விஜயகாந்த் ரொம்பவே சந்தோஷமாக உள்ளார். ம.ந.கூட்டணியில் இருந்து வைகோ விலக காரணமாக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சிலரிடம் பேசி, தனது சந்தோஷத்தை விஜயகாந்த பகிர்ந்து கொண்டார். தேவையானால், நல்ல சந்தர்ப்பத்தில், மீண்டும் கூட்டணியில் இணைவேன் என்றும் அப்போது, விஜகாந்த கூறியதாகத் தெரிகிறது. வைகோ எங்கேணும் விஜயகாந்த குறித்து விமர்சித்தால், அவருக்கு தக்க பதலடி கொடுக்கவும், தே.மு.தி.க., தலைவர்கள் தயாராக உள்ளனர். சின்ன விமர்சனம் கிளம்பினாலும், வைகோ மீது கடுமையாக அட்டாக்கை தொடுக்கும் தே.மு.தி.க., இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.
English Summary:
From a welfare coalition zeroth, withdrawal, vijayakanth party are said to be very happy.
Vaiko withdrawal from the coalition People's Welfare, vijayakanth esoteric question of why we should rejoice at DMDK, inquired of the state executive.