சென்னை : வர்தா புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 30 விமானங்கள் சேவை தாமதமாகி உள்ளன. 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான சேவை பாதிப்பு :
சென்னை விமான நிலையம் பகுதியில் பலத்த காற்றுடன், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு வந்து செல்லும் விமானங்கள் அனைத்தும் தாமதமாகவே புறப்பட்டுச் செல்கின்றன. பிற்பகலில் வர்தா புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், பிற்பகலில் இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக சென்னையில் தரையிறங்க வேண்டிய அனைத்து விமானங்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்படுகின்றன.தற்போதைய தகவலின்படி, அந்தமான், டில்லி, திருவனந்தபுரம், புனே, ைதராபாத், கொச்சி, பெங்களூரு, மும்பை நகரங்களுக்கான உள்நாட்டு விமான சேவையும், சிங்கப்பூர், மலேசியா, துபாய், அபுதாபி, ரியாத் ஆகிய பகுதிகளுக்கான விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளன. 20 உள்நாட்டு விமானங்கள், 10 வெளிநாட்டு விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.காலை, 11:00 மணிக்கு கிடைத்த தகவலின்படி, இரவு, 8:00 மணி வரை, 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 14 விமானங்கள் திருவனந்தபுரம், பெங்களூரு, ைதராபாத் நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
English summary:
Chennai: Chennai varta storm due to strong winds, heavy rain is coming. As a result, the airline has been hit hard. There are 30 flights delayed service. 27 flights were canceled.