சென்னை : தமிழகத்தில் வர்தா புயலால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடவும், மதிப்பிடவும் மத்திய குழு இன்று(டிச., 23) தமிழகம் வருகிறது.
வர்தா புயல் :
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வர்தா புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது. நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.22,573 கோடி நிவாரண நிதி தேவை என பிரதமர் மோடியிடம், முதல்வர் பன்னீர் செல்வம் நேரில் கோரிக்கை விடுத்தார். மேலும் புயல் பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பி வைக்கவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மத்திய குழு :
இந்நிலையில் வர்தா புயலின் சேதங்களை பார்வையிடவும் மற்றும் மதிப்பிடவும், மத்திய உள்துறை இணை செயலாளர் பிரவின் வசிஷ்டா தலைமையிலான 8 பேர் கொண்ட மத்திய குழு இன்று(டிச., 23) தமிழகம் வருகிறது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
Chennai: Tamil Nadu varta visit storm-damaged areas, rate of the Central Committee today (Dec., 23) is Tamil Nadu.