சென்னை : சென்னையை புரட்டி எடுத்த, 'வர்தா' புயலால், மின் வாரியத்திற்கு, 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில், குறிப்பிட்ட பகுதிகளில், 'கேபிள்' மூலமாகவும், மற்ற இடங்களில், மின் கம்பம் மூலமாகவும், மின் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த திங்களன்று, சென்னை மற்றும் புறநகரை, வர்தா புயல் புரட்டி எடுத்தது.
பெருத்த சேதம்:
இதனால், மரங்கள் வேரோடு சாய்ந்ததால், அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர்கள், மின் வினியோக பெட்டிகள், பெருத்த சேதமடைந்து உள்ளன; மின் கம்பம், மின் கோபுரங்களும் சாய்ந்தன. இதனால், மின் வாரியத்திற்கு, 1,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
1,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு:
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், மின் சாதனங்கள் சேதம் குறித்த விபரத்தை கணக்கிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, சேதமடைந்ததாக கணக்கிடப்பட்டுள்ள சாதனங்களின் மதிப்பு, 1,000 கோடி ரூபாயை தாண்டுகிறது.
கடந்த, 2015 இறுதியில் பெய்த, கனமழையை போல், நடப்பாண்டிலும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை முன்கூட்டியே அறிந்து, அனைத்து சாதனங்களும் இருப்பு வைக்கப்பட்டன. எனவே, தற்போது சேதமடைந்த சாதனங்களுக்கு பதில், அவை உடனடியாக மாற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Chennai: Chennai to rattle, "varta" storm, the electrical board, a loss of Rs 1,000 crore.
In Chennai, in certain areas, "cable", through other places, by the power pole, power is distributed. Last Monday, Chennai and suburbs, varta storm took inverter.