சென்னை: வர்தா புயல் தாக்கத்தை சமாளிக்க கப்பல்கள், விமானங்கள் தயார் நிலையில் உள்ளன என்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் தயார் நிலையில் உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தேவை ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பு இடங்களுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரம் பேருக்கு தேவையான உணவு, மருந்துகள் தயார் நிலையில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு, உடை, மருத்துவர்கள், ஓட்டுநர்கள், நீச்சல் குழுக்கள் தயார் நிலையில் உள்ளது என்றும் 1077 எண்ணில் 24 மணி நேரமும் மக்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடற்படையினர் கிழக்கு பிராந்திய அதிகாரிகள் மணிலா அரசோடு தொடர்பில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்தா புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 440 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு மிகவும் அருகே வர்தா புயல் கரையை கடக்கும் என்றும் கரையை கடக்கும் போது 80-90 கி.மீ கற்று வீசக்கூடும் என்றும் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
English summary:
Chennai: varta storm to deal with the impact of ships and aircraft are on standby, ready to be in the National Disaster Rescue Committee, the government reported. It has been decided to take care of people and places in need. 5 thousand people needed food and medicines are reported to be ready