சென்னை : வர்தா புயல் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், தங்குதடையின்றி குடிநீர் மற்றும் மின்விநியோகம் வழங்கும் வகையில், அமைச்சர்கள் முன்னிலையில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், வேகமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.
சென்னையில் கடந்த 12-ம் தேதி வீசிய வர்தா புயலால், நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்களும், மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மின் விநியோகமும் முடங்கியது. இதையடுத்து மீட்புப் பணிகளை தமிழக அரசு துரிதகதியில் முடுக்கிவிட்டுள்ளது.
சாலையோரம் விழுந்துகிடந்த மரங்களை அகற்றும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இடையூரற்ற போக்குவரத்துக்கு உறுதி செய்யப்பட்டது. மாநகராட்சி ஊழியர்களின் துரித செயல்பாட்டால், புயல் தாக்கிய மறுநாளே சென்னையில் போக்குவரத்து சீரடையத் தொடங்கியது. சென்னையில் அனைத்துப் பகுதிகளுக்கும் மின்விநியோகமும் உடனடியாக வழங்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களிலும், கழிவுநீர் கால்வாய் பகுதிகளிலும் மரக்கழிவுகள் அகற்றப்பட்டு தொற்றுநோய்கள் பரவாத வண்ணம் பிளீச்சிங் பவுடர்கள் தெளிக்கப்பட்டன.
அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் :
திருவள்ளூர் மாவட்டத்தில் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்வது தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம், பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி .வேலுமணி, கே.பி. அன்பழகன், ஆர். காமராஜ், டாக்டர் சி.விஜயபாஸ்கர்,. பா.பெஞ்ஜமின், . க. பாண்டியராஜன், .வெல்லமண்டி என். நடராஜன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக, கூட்டத்திற்குப் பின்னர் பேட்டியளித்த அமைச்சர்கள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெதிபாளையம் மீனவக் கிராமத்தில், வர்தா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேட்டி, சேலை, அரிசி, பால் பவுடர், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை அமைச்சர்கள் . எஸ்.பி. வேலுமணி, . பா.பெஞ்ஜமின், ஆகியோர் வழங்கினர். அங்கு அமைக்கப்பட்ட மருத்துவ முகாமையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். மேலும், சேதமடைந்த படகுகள், கட்டுமரங்களையும் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினர்.
மீனவர்களுக்கு ஆறுதல்:
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் குப்பம், எண்ணூர் குப்பம், எர்ணாவூர் குப்பம், காசிகோவில் குப்பம் உள்ளிட்ட 18 மீனவக் குப்பங்களைச் சேர்ந்த மீனவர்களை அமைச்சர் டி.ஜெயக்குமார் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், புயலால் சேதமடைந்த விசைப்படகுகள், ஃபைபர் படகுகள், கட்டுமரங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு, நிவாரண உதவிகளை விரைந்து வழங்குவதற்கு தேவையான ஆலோசனைகளையும் அமைச்சர் வழங்கினார். இதில், மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பெரியபாளையம், மஞ்சங்கரணை, தண்டலம் உள்ளிட்ட கிராமங்களில் நெற்பயிர்கள், சேதமடைந்த வீடுகளை அமைச்சர் பா.பெஞ்ஜமின் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராமதண்டலம், வெள்ளியூர் பகுதிகளில் விவசாயப் பயிர்கள் மற்றும் சேதமடைந்த வீடுகளை, கழக நாடாளுமன்றக்குழு தலைவர் டாக்டர் பி.வேணுகோபால் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.
விலையில்லா வேட்டி, சேலை :
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 50 பேருக்கு, தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி, விலையில்லா வேட்டி, சேலை மற்றும் அரிசி உள்ளிட்டவற்றை அமைச்சர் டாக்டர் வி. சரோஜா வழங்கினார். இதனைத்தொடர்ந்து, திரிசூலம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின் இணைப்புசீரமைப்பு பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பரங்கிமலை பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதிகளைச் சேர்ந்த 64 பழங்குடியின குடும்பங்களுக்கு, தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம், 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிதியுதவி, விலையில்லா வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வர்தா புயல் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
English summary:
Varta affected by the storm, Chennai, Tiruvallur, Kancheepuram districts, in order to provide uninterrupted water and power, conditioning and relief works carried out in the presence of ministers, the faster it comes back to the normal level.