புதுடில்லி: வர்தா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உதவ வேண்டும் என ராஜ்யசபாவில், காங்கிரஸ், இடதுசாரி மற்றும் தி.மு.க., கோரிக்கை விடுத்தன. இதற்கு மத்திய அரசு பரிசீலனை செய்யும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
எதிரொலிப்பு:
வங்கக்கடலில் உருவான வர்தா புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 24 பேர் புயலுக்கு பலியாகி உள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், வர்தா புயலின் பாதிப்பு பார்லிமென்டில் எதிரொலித்தது. இன்று ராஜ்யசபா கூடியதும் தமிழகத்திற்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
இன்றே சொல்லுங்க...:
காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் பேசுகையில், நிதியுதவி அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும். மத்திய அரசிடம், மாநில அரசு அதிக நிதியை எதிர்பார்க்கும். மத்திய அரசு இன்றே, நிதியுதவி வழங்கவது குறித்து அறிவிக்க வேண்டும். மக்கள் பணம் எடுக்கும் வகையில், ஏடிஎம்கள் மற்றும் வங்கிகள் செயல்பட வேண்டும் எனக்கூறினார்.
ரூ.1000 கோடி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா கூறியதாவது: புயல், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களை பாதித்துள்ளது. பலர் பலியாகியுள்ளனர். ஆயிரகணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நகரின் பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன ரூபாய் நோட்டு வாபசால் மக்கள் பணம் எடுக்க பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு உடனடியாக, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்திற்கு ரூ.1,000 கோடி அளிக்க வேண்டும் எனக்கூறினார்.
குழு:
தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா பேசுகையில், புயல் மற்றும் மழைக்கு 24 பேர் இறந்துள்ளனர். ரூபாய் நோட்டு வாபசால் மக்கள் பணம் எடுக்க முடியவில்லை. இதனால் மக்கள் பணம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். ஒரு சில இடங்களில் ஒரு லிட்டர் பால் ரூ.200க்கு விற்கப்படுகிறது. தமிழகத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சேதத்தை ஆராய மத்திய அரசு உடனடியாக குழுவை அமைக்க வேண்டும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.,ரங்கராஜன் மற்றும் பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன்சாமி ஆகியோர், புயலால் ஏற்பட்ட சேதத்தை அறிய மத்திய அரசு குழுவை விரைவாக அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கவலை:
இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசுகையில், உறுப்பினர்களின் கவலையை மத்திய அரசு பகிர்ந்து கொள்கிறது. இது மிகவும் தீவிரமான பிரச்னை. புயலை சமாளிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. தேசிய பேரிடர் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ராணுவ குழுக்கள் அனுப்பப்பட்டன. நிவாரண பணிகளுக்கு தேவையான உதவியை மத்திய அரசு நிச்சயம் செய்யும். உறுப்பினர்களின் கருத்துகள் எடுத்து கொள்ளப்பட்டன. இவை அனைத்தும் பரிசீலனை செய்யப்படும். அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
English Summary:
NEW DELHI: varta to help storm victims in Tamil Nadu in the Rajya Sabha, the Congress, the Left and the DMK demanded. Finance Minister Arun Jaitley said the government would consider it.