புதுடில்லி : வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட, மத்திய குழு, இன்று தமிழகம் வருகிறது.
'வர்தா' புயல்:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், டிச., 12ல், 'வர்தா' புயல், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மரங்கள், மின் கம்பங்கள், மின் கோபுரங்கள் சரிந்து விழுந்தன. உடனே, தமிழக அரசு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மீட்பு பணிகளுக்கு, முதல்வர் பன்னீர்செல்வம், 500 கோடி ரூபாய் ஒதுக்கினார். டில்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த, பன்னீர்செல்வம், 'புயலில், 22 ஆயிரத்து, 573 கோடி ரூபாய்க்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பை மதிப்பீடு செய்ய, மத்திய குழுவை அனுப்ப வேண்டும். நிவாரண பணிக்கு, உடனே, 1,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்' என, கோரினார்.
மத்திய குழு :
அதைத் தொடர்ந்து, மத்திய அரசு, புயல் பாதிப்பை பார்வையிட, மத்திய குழுவை அனுப்புகிறது. மத்திய குழுவில், உள்துறை இணை செயலர் பிரவீன் வசிஸ்டா தலைமையில், ஒன்பது பேர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு, இன்று மாலை, சென்னை வருகிறது. நாளை காலை, தலைமை செயலகத்தில், முதல்வரை சந்தித்து பேசுகிறது. அதன்பின், சென்னை மாநகராட்சி அலுவலகம் சென்று, புயல் பாதிப்பு குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகிறது.
ஆய்வு:
பாதிப்பு விபரங்களை, தமிழக அதிகாரிகள் விவரிப்பர். பின், அக்குழு, சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நேரில் சென்று பார்வையிட உள்ளது. மாலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில், வண்டலுார் உயிரியல் பூங்கா, களவேந்தபட்டு கிராமத்தில், சாயந்து கிடக்கும் மின் கோபுரங்கள் ஆகியவற்றை பார்வையிடுகிறது. நாளை மறுநாள், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வை முடித்து, இக்குழு, 30ம் தேதி, டில்லி புறப்பட்டு செல்கிறது. இந்த தகவலை, தமிழக வருவாய் துறை நிர்வாக கமிஷனர், சத்யகோபால் தெரிவித்தார்.
English summary:
NEW DELHI : varta view the damage caused by the storm, the Central Committee, is the state today.