சென்னை: தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ள கடும் எதிர்ப்பைத் தொடர்ந்தே, சசிகலா, எம்.ஜி.ஆர்., நினைவு தினத்தில், அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என்ற தகவல், அ.தி.மு.க., வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
தரிசனம்:
ஜெயலலிதா இறந்த நான்காவது நாளில் இருந்து, தொண்டர்களையும்; அமைச்சர்களையும்; பத்திரிகையாளர்களையும், துணைவேந்தர்களையும் போயஸ் தோட்டம் வரவழைத்து தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார் சசிகலா. ஜெயலலிதா இறந்து அடக்கம் செய்யப்பட்ட மறுதினமே, பத்திரிகையாளர் சோ இறந்துவிட, அவரது வீட்டுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றார் சசிகலா. அடுத்தடுத்த நாட்களில், ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கும் சென்று, அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார்.
இப்படி வெளியுலக பிரவேசம் செய்து கொண்டிருந்த சசிகலா, கடந்த 24ம் தேதி, எம்.ஜி.ஆர்., நினைவு நாளின் போது மட்டும், அஞ்சலி செலுத்துவதற்காக, எம்.ஜி.ஆர்., சமாதி அமைந்துள்ள சென்னை, மெரினா கடற்கரைப் பக்கம் செல்லவில்லை.இதற்கு காரணம், அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ள கடுமையான எதிர்ப்புதான் காரணம் என கூறப்படுகிறது.
இது குறித்து அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியிலும் ஆட்சியிலும் அவர் வகித்த பதவிகளை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என, சசிகலா நினைக்கிறார். அதற்காக, முதல் கட்டமாக, கட்சியின் பொது செயலர் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என, துடியாய் துடிக்கிறார். ஆனால், அதற்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு இருக்கிறது. தொண்டர்களில் பெருமான்மையானவர்கள், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சசிகலா போயஸ் தோட்டத்தில் தங்கி இருப்பதற்கும், தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருக்கிறது.
இதை, தமிழகம் முழுவதும் சசிகலாவை வாழ்த்தி ஒட்டப்படும் போஸ்டர்களை கிழித்தெறிவதன் மூலம் காட்டி வருகின்றனர். பலர், சசிகலாவை கடுமையாக திட்டியும் பேட்டிக் கொடுக்கின்றனர். தினந்தோறும் போயஸ் தோட்டம் பக்கம் வரும் கட்சித் தொண்டர்கள், வேதா இல்லம் முன்பாக நின்று கொண்டே, சசிகலாவை, அங்கிருந்து வெளியேற வேண்டும் என குரல் கொடுப்பதோடு, ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாதான் காரணம் என்றும் சொல்லி, கடும் குரல் எழுப்புகின்றனர். இப்படி ஆவேசமாக வருபவர்களை தடுக்க முடியாமல், தவித்து வருகின்றனர், சசிகலா தரப்பினர். ஏற்கனவே, அதிக அளவில் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்ததே, இப்படி வருகிறவர்களை சமாதானப்படுத்தி அனுப்பத்தான்.
தற்போது அந்தப் பணியை, புதிதாக போயஸ் தோட்டப் பாதுகாப்புக்கு வந்திருக்கும் தனியார் செக்யூரிட்டிகள் செய்து வருகின்றனர். அவர்களுக்கு உத்தரவே, ஆத்திரத்தோடு வந்து கூக்குரலிடுகிறவர்களை சமாதானப்படுத்தி அனுப்ப வேண்டும் என்பதுதான். சசிகலா, ஜெயலலிதா அடக்கம் செய்யபப்ட்ட இடத்துக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது, அங்கு கூடிய பெண் தொண்டர்கள், சசிகலாவுக்கு எதிராக குரல் எழுப்பியதோடு, சாபம் விட்டனர். தொலைக்காட்சிகளுக்கும் கடுமையாக பேட்டி கொடுத்தனர்.
அதேபோன்றதொரு சூழல் நிலை ஏற்பட்டு, அது, மோதலாகக் கூட உருவெடுத்து விடலாம். சசிகலா தாக்கப்படும் சம்பவம் கூட நடந்துவிடக் கூடும் என, சசிகலாவை சிலர் எச்சரித்துள்ளனர். அதையடுத்தே, எம்.ஜி.ஆர்., சமாதிக்கு செல்லாத சசிகலா, அவரது நினைவு நாளுக்கு, கட்சி முன்னோடிகளையும்; அமைச்சர்களையும் அனுப்பி வைத்தார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
English summary:
Chennai: The strongest opposition arose among the volunteers followed, Shashikala, mgr., Memorial Day, the information did not come to pay respects at his graveside, Digg, spoken in circles abuzz.