நேர்மையான முறையில் தேர்தல்களை நடத்துவதற்காக பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறைகளுக்கு அரசின் ஒப்புதல் கிடைப்பதற்காக காத்திருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்தார்.
இந்தியத் தேர்தல் சட்டதிட்டங்கள் குறித்த தேசியக் கருத்தரங்கம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கில் நஜீம் ஜைதி பேசியதாவது:
இந்தியாவில் நேர்மையான முறையில் தேர்தல்களை நடத்த வேண்டுமானால், தேர்தல் தொடர்பான சட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியம். இதற்காக, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
குற்றவாளிகள் தேர்தல்களில் நிறுத்தப்படுவதைத் தடுப்பது; தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள்கள் வழங்குவதை கிரிமினல் குற்றங்களாக்குவது; பணம் கொடுத்து தங்களுக்குச் சாதகமாக செய்திகளை வெளியிடுவதைத் தடுப்பது உள்ளிட்டவை அந்தச் சீர்திருத்த நடவடிக்கைகளில் சிலவாகும்.
இதனைக் கருத்தில்கொண்டு, தேர்தல் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறோம். இதுதொடர்பாக 47 சீர்திருத்த நெறிமுறைகளை மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்காக அனுப்பியிருக்கிறோம். இவை யாவும், தேர்தல் ஆணையத்தால் நன்கு ஆய்வு செய்து அனுப்பப்பட்ட பரிந்துரைகளாகும். இவற்றை விட முக்கியமாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டாலோ, லஞ்சம் வழங்குவது உறுதிசெய்யப்பட்டாலோ அந்தத் தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்றார் நஜீம் ஜைதி.
English Summary : Waiting for government approval.Suggested guidelines for conducting the elections in a fair manner approved by the government is waiting for hard najim Zaidi, Chief Election Commissioner said. Election rules and regulations of the National Seminar was held in New Delhi on Saturday.