புதுடெல்லி, பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் கடந்த ஒரு மாதமாக எதிர் கட்சிகள் அமளியால் எந்த வித நடவடிக்கையும் இல்லாமல் முடிந்தது. எதிர் கட்சிகள் அமளியால் இந்த கூட்டத்தொடரில் 4 மசோதாக்கள் மட்டுமே நிறைவேறின. கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்னர் 55 மசோதாக்கள் நிலுவையில் இருந்தன. இந்த கூட்டத்தொடரில் மேலும் 10 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த கூட்டத்தொடர் முடிவிற்கு பின்னர் தற்போது 60 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. ஒரு மசோதா திரும்ப பெறப்பட்டது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி துவங்கி நேற்று வரை(டிச16) ஒரு மாத காலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடர் தொடங்க ஒரு வாரம் இருப்பதற்கு முன்னர் பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். நாட்டில் உள்ள கறுப்பு பணம், வரி ஏய்ப்பு, ஊழல், தீவிரவாதத்திற்கு நிதி உதவி செல்வதை தடுத்தல் ஆகிய நடவடிக்கைகளை முற்றிலும் ஒடுக்குவதற்காக இந்த நடவடிக்கையை எடுத்ததாக பிரதமர் மோடி கூறினார்.
அவரது அறிவிப்பை தொடர்ந்து நடந்த பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் அரசின் ரூபாய் நோட்டு முடிவை எதிர்த்து எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன . இந்த கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் முதல் நேற்று வரை ஒரு மாதம் பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற முடிவை அரசு திரும்ப பெற வேண்டும். சாதாரண , நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மக்கள் தங்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் நாள் கணக்கில் காத்து கிடந்து 100 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதனால் அரசு தனது முடிவை திரும்பப்பெற்று பழைய ரூ500,ரூ1000 நோட்டுகள் செல்லும் என அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடுமையாக வலியுறுத்தி வருகின்றன.
அந்த கட்சிகளின் எம்.பிக்களும் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் நடத்த விடாமல் கடும் கூச்சல் போட்டு வந்தார்கள். இந்த நிலையில் பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிந்தது. அமளியில் தொடங்கி அமளியில் முடிந்த இந்த கூட்டத்தொடரில் எந்த பிரச்சினைகளும் விவாதிக்கப்படவில்லை. எந்த நடவடிக்கையும் இல்லாமல் முடங்கிய பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் குறித்து மூத்த பா.ஜ.க தலைவரும், லோக் சபா எம்.பியுமான அத்வானி கடும் வேதனையை வெளிப்படுத்தினார். தான் பதவியில் இருந்து விலகலாமா? என்று யோசிக்க தோன்றுகிறது என அவர் தனது கட்சி அமைச்சகர்களிடம் லோக் சபாவில் வேதனையுடன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் எதிர் கட்சிகள் அரசின் ரூபாய் நோட்டு முடிவு குறித்து எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தனது கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடியை நேற்று ச ந் தித்தார். அப்போது, நாட்டில் உள்ள விவசாயிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். அவர்களது கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ராகுல் காந்தி தன்னை சந்திக்க வந்தது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், பொது மக்கள் பிரச்சினைக்காக அடிக்கடி தன்னை வந்து ராகுல் காந்தி சந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இரு தலைவர்களும் நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டனர்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த காங்கிரசின் தலைவர் திடீரென பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து மற்ற கட்சிகள் அதிருப்தியை தெரிவித்தன. பழைய ரூபாய் நோட்டு செல்லாது என அரசு எடுத்த முடிவு திட்ட மிட்ட கொள்ளை, சட்டபூர்வ தவறு என்று ராஜ்ய சபாவில் முன்னாள் பிரதமரும் , காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்தார்.
பாராளுமன்றம் எந்த நடவடிக்கையும் இல்லாமல் முடங்குவது குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எதிர் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். பாராளுமன்றம் தர்ணா செய்வதற்கோ, போராட்டம் நடத்துவதற்கான இடமோ அல்ல என்றார்.
பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நேற்று நிறைவடையும் போது ராஜ்ய சபா தலைவர் ஹமீத் அன்சாரி கூறுகையில், தொடர்ச்சியாக இடையூறுகளுடன் இந்த பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் முடிந்துள்ளது. அவையின் அனைத்து தரப்பினரும் தங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு இடையூறு, போராட்டம் குறித்து ஏற்படும் விளைவுகளை எண்ணிப்பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். லோக் சபா சபா நாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று கூறுகையில், இந்த அவையில் கூடுதல் விவாதங்கள் நடக்க வேண்டும். அவை அதிக இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்றார். எதிர் கட்சிகள் அமளியால் இந்த கூட்டத்தொடரில் 4 மசோதாக்கள் மட்டுமே நிறைவேறின. கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்னர் 55 மசோதாக்கள் நிலுவையில் இருந்தன. இந்த கூட்டத்தொடரில் மேலும் 10 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த கூட்டத்தொடர் முடிவிற்கு பின்னர் தற்போது 60 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. ஒரு மசோதா திரும்ப பெறப்பட்டது.
English Summary:
New Delhi, the Winter Session of Parliament in uproar over the past month by opposition parties ended without any action. In this session, 4 bills were fulfilled by the uproar by the opposition parties. 55 bills were pending before the session. Another 10 bills were introduced in this session. There are currently 60 bills pending since the end of the session. Got back a bill.