ஜெய்ப்பூர் - மோடியின் முடிவால் விவசாயிகள் தினம் தோறும் தற்கொலை செய்கிறார்கள். பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு ஏழை மக்கள் , விவசாயிகளன் வாழ்கையை சீரழித்து விட்டது என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஜெய்பூர் கூட்டத்தில் பா.ஜ.க கூட்டணி அரசை விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி ஜெய்பூர் நகரில் நேற்று நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
பழைய ரூ500, ரூ1000நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி அறிவித்தார். கறுப்புப்பணம், வரி ஏய்ப்பு, ஊழல் , தீவிரவாதத்திற்கு நிதி செல்லுதல் ஆகிய நடவடிக்கைகளை முற்றிலும் ஒடுக்கவே இந்த முடிவை எடுத்ததாக பிரதமர் கூறியுள்ளார். ஆனால் அவரது முடிவால் ஏழை மக்கள் , விவசாயிகள் வாழ்க்கை சீரழிந்துள்ளது. வீடுகளில் பெண்கள் வைத்திருக்கும் பணம் கறுப்புப்பணம் அல்ல. ஊழலுக்கு எதிராக யாகம் நடத்துவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதில் ஏழை மக்கள் ,விவசாயிகள்தான் தியாகம் செய்தவர்களாக உள்ளனர். சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியுள்ள நபர்களின் பட்டியலை பாராளுமன்றத்தில் மோடி வெளியிடாதது ஏன்? சுவிஸ் அரசு உரிய தகவல்களை அளித்த பின்னரும் இந்த பட்டியலை பிரதமர் வெளியிடவில்லை.
பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற முடிவால் நாட்டின் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது. இந்த பிரச்சினை இன்னும் 6-7 மாதங்களுக்கு நீடிக்கும். விவசாயிகளின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அவர்கள் நாள் தோறும் தற்கொலை செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், முன்னாள் மாநில முதல்வர் அசோக் கெலாட், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் குருதாஸ் காமத், மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
English summary:
Jaipur - Modi's decision to commit suicide by farmers throughout the day. Old Rs 500, Rs 1000 notes that the Prime Minister's announcement of poor people is not valid, and that led to life farmer Jaipur session of Congress vice president Rahul Gandhi criticized the BJP coalition government.