அல்மோரா: ரூபாய் நோட்டு வாபஸ் பொருளாதார கொள்ளை என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறினார்.
ஏழைகளுக்கு எதிரானது:
உத்தர்காண்ட் மாநிலம் அல்மோரா பகுதியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: உத்தர்காண்ட் மாநிலத்திற்கு தேவையான நிதியை பிரதமர் ஒதுக்கவில்லை. மாநிலத்தில் உள்ள மலை பகுதிகளில் போன் சிக்னல் கிடைக்கவில்லை. பின்னர் எப்படி பணப்பரிமாற்றம் செய்ய முடியும். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் வேறொன்றுமில்லை. இது பொருளாதார கொள்ளை. இந்த திட்டம் ஏழைகளுக்கு எதிரானது. அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். ரூபாய் நோட்டு வாபசால், ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தை பயன்படுத்தி ஏழை மக்கள் கொள்ளையடிக்கப்படுகின்றனர். தேசிய வேலைவாய்ப்பு ஊரக திட்டத்தை மத்திய அரசு பறித்து விட்டது. ஒரு சதவீத பணக்காரர்கள் மட்டுமே கறுப்பு பணம் வைத்துள்ளனர். ஏழை மக்களிடம் கறுப்பு பணம் இல்லை. ரூபாய் நோட்டு வாபசால், இந்தியாவை பிரதமர் இரண்டாக பிரித்து விட்டார். பா.ஜ., தேர்தல் அறிக்கையில் அறிவித்த ரூ.15 லட்சம் எத்தனை பேருக்கு கிடைத்தது என்றார்.
English Summary:
Almora: Rahul said that the economic policy bill withdrawn.