புதுடில்லி:ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக, கடந்த 8 ம் தேதி பிரதமர் அறிவிப்பதற்கு முன்னர் மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
எதிர்க்கட்சிகள் புகார்:
கடந்த நவம்பர் 8 ம் தேதி பிரதமர் மோடி, கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார். இதனையடுத்து, இந்த திட்டம் தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு கலந்து ஆலோசனை செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. இந்த திட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை தொடர்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், நீண்டநாட்கள் நன்கு ஆலோசனை செய்யப்பட்ட பிறகே, இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கி அளித்த தகவல்:
இந்நிலையில் ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்த தகவல்: கடந்த நவம்பர் 8 ம் தேதி ரிசர்வ் வங்கியின் மத்திய குழு இயக்குநர் கூட்டத்தில் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் பற்றி முடிவெடுக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் மொத்தமுள்ள 10 உறுப்பினர்களில் 8 பேர் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், பிரதமர் மோடி அறிவிப்பிற்கு சற்று முன்னர் தான் இந்த முடிவு குறித்து மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது.
English summary:
NEW DELHI: The rupee note in relation to the withdrawal, before announcing last 8 th Prime Minister, had been recommended to the federal government, the Reserve Bank said.