சென்னை - மதிமுக விலகிச் சென்றாலும் மக்கள் நலக் கூட்டணி இயங்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தோழமையும், நட்பும் என்றும் தொடரும்:
முன்னதாக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், ''மக்கள் நலக் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகிக் கொள்கிறது. உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தோழமையும், நட்பும் என்றும் தொடரும்'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ம.தி.மு.க. விலகிச் சென்றாலும் மக்கள் நலக் கூட்டணி இயங்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
''ஒன்றரை ஆண்டுகாலம் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக ஆற்றலோடு விளங்கியவர் வைகோ. தற்போது இக்கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அரசியல் சட்ட பாதுகாப்பு மாநாடு :
மதிமுகவின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை எடுக்க ம.தி.மு.க.வுக்கு முழு சுதந்திரம் உள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் ம.தி.மு.க. தவிர மற்ற மூன்று கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரசியல் சட்ட பாதுகாப்பு மாநாடு டிச.28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ம.தி.மு.க. பங்கேற்கவில்லை. இந்த முரண்பாடு காரணமாக கூட்டணியில் தொடர முடியாது என வைகோ விலகல் முடிவை எடுத்திருக்கலாம்.
மக்கள் பிரச்சினைக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய 3 கட்சிகளும் இணைந்து இயங்கும். மக்கள் நலக் கூட்டணிக்கான செயல்திட்டங்களோடு அதிகாரபூர்வமாக அதை அறிவிப்போம்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
English Summary:
Chennai - Friend Feed leave the running of Public Welfare Alliance said that the VCK leader herein.