
ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது தீபாவை உள்ளேயே அனுமதிக்கவில்லை.
சசிகலா கஸ்டடியில் தீபக்:
ஆனால் தீபாவின் சகோதரர் தீபக்கைதான் சசிகலா தரப்பு தங்கள் பக்கம் வைத்துக் கொண்டது. இதை முதன் முதலாக ஒன் இந்தியா தமிழ் இணையதளம் செய்தியாக வெளியிட்டது.
தீபாவுக்கு அனுமதி மறுப்பு:
ஜெயலலிதா மறைந்தபோதும் தீபாவை அப்பல்லோ மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை. ராஜாஜி ஹாலில் கடும் கெடுபிடிகளுக்கு இடையே தீபா சில நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதாவுக்கு இறுதிச் சட்டங்குகளை சசிகலாவுடன் இணைந்து தீபக் மட்டுமே செய்தார். பின்னர் தீபா தனியாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருந்தார்.
அதிமுக பொதுச்செயலர் யார்?:
இந்த நிலையில் அதிமுகவின் புதிய பொதுச்செயலர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலா உட்பட பலரது பெயர்களும் அடிபடும் நிலையில் தீபாதான் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும்; சசிகலாவை ஏற்க முடியாது என்ற குரல்களும் எழுந்துள்ளன.
அரசியலுக்கு வர ரெடி...:
தீபாவும் தாம் அரசியலுக்கு வர தயாராக இருப்பதாகவும் ஜெயலலிதா உடல்நிலை மோசமானதற்கு சசிகலாவே காரணம் எனவும் ஆங்கில டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் தீபா குற்றம்சாட்டியுள்ளார்.
ஃபேஸ்புக்கில் அழைப்புகள்:
பேஸ்புக்கில் Deepa Jayakumar என்ற ஐடியை நீண்டகாலமாக தீபா பயன்படுத்தி வருகிறார். அதில் நிலா டிவியில் பயிற்சி பத்திரிகையாளராக தொடங்கியது; இந்தியன் எக்ஸ்பிரஸில் சப் எடிட்டாராக பணியாற்றியது உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த பேஸ்புக் பக்கத்திலும் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள Official.DeepaJayaKumar என்ற பக்கத்திலும் அதிமுகவினர், நீங்க அரசியலுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்து வருகின்றனர்.
English summary:
Some section of ADMK Cadres invite Jayalalithaa's niece Deepa Jayakumar to join the Politics and lead the Party.