
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானர். அவரது உடல் நேற்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த நிலையில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியோ அதிமுக உடையும் என ஆரூடம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது: அதிமுக நிச்சயமாக உடைவது உறுதி. சசிகலா கட்சி பொறுப்பும் ஏற்கும் நிலையில் ஆட்சியையும் கட்சியையும் தங்களது கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பார். இதனால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தால் சுதந்திரமாக செயல்பட முடியாது.
ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரையில் தம்முடைய குடும்பத்தில் இருந்து ஒருவரைத்தான் சசிகலாவுக்கு எதிராக முன்னிறுத்துவார்.
ஓ. பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் செல்வாக்கு இல்லை. சசிகலாவுக்கோ அரசியல் அறிவு இல்லை.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
English summary:
BJP Rajyasabha MP Subramanian Swamy said that AIADMK will not survive as a single entity.