சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் காலை 11 மணிக்கு கட்சி தலைமையகத்திற்கு வர உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தகவல் வெளியிட்டிருந்த நிலையில், மாநிலம் முழுவதிலிருந்து தொண்டர்கள் சென்னையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதனிடையே, அதிமுக எம்எல்ஏக்கள் 135 பேரும், சென்னைக்கு வருமாறு, அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து அவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை 11 மணிக்கு அவர்கள் கட்சி தலைமையகத்தில் கூட உள்ளனர்.
இவர்களை எதற்காக வர கூறியுள்ளனர் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. இவர்களை யார் வரக்கூறியுள்ளார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

English Summary:
All AIADMK MLAs asked to assemble a Apollo hospital at 11 AM after Jayalalitha fell ill.