சென்னை,
‘வார்தா’ புயலால் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக சென்னை சென்டிரல், எழும்பூரில் இருந்து இயக்கப்படும் 17 ரெயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–
ரத்து
சென்னை சென்டிரலில் இயக்கப்படும் மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22637), அரக்கோணம் பயணிகள் ரெயில் (56001), கே.எஸ்.ஆர்.பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12609), விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ் (12712), திருப்பதி எக்ஸ்பிரஸ் (16053), கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12679), திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (12695), கே.எஸ்.ஆர். பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ் (12607), குண்டூர் பயணிகள் ரெயில் (57239), பூரி வாராந்திர எக்ஸ்பிரஸ் (22860), திருப்பதி கருடாதிரி எக்ஸ்பிரஸ் (16203), ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் (12603), மங்களூரு எக்ஸ்பிரஸ் (12685) ஆகிய ரெயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
இதேபோன்று சென்னை எழும்பூரில் இயக்கப்படும் சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் (11042), வைகை எக்ஸ்பிரஸ் (12635), பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605), திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (16105) ரெயில்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன.
மாற்று பாதையில்
மேலும் மோசமான வானிலை காரணமாக சென்டிரலில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சில மாற்று பாதையில் இயக்கப்பட்டன.
சென்னை சென்டிரலில் இருந்து இயக்கப்படும் அவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (12842), அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் (12656), அந்தமான் எக்ஸ்பிரஸ் (16032) ஆகிய ரெயில்கள் நேற்று அரக்கோணம், ரேணிகுண்டா, குண்டூர் வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட்டன.
இதேபோன்று மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வழியாக டேராடூனுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் (12687) மற்றும் யசுவந்த்பூரில் இருந்து சென்னை சென்டிரல் வழியாக இயக்கப்படும் பாடலிபுத்ரா எக்ஸ்பிரஸ் (22352) ரெயில்கள் நேற்று காட்பாடி, ரேணிகுண்டா வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட்டன.
பகுதி நேரமாக ரத்து
விஜயவாடாவில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்ட விஜயவாடா–சென்னை சென்டிரல் பினாகினி எக்ஸ்பிரஸ் (12711), குண்டூர்–சென்னை சென்டிரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டன.
மறுமார்க்கமாக சென்னை சென்டிரலில் இருந்து நேற்று மதியம் 2.05 மணிக்கு புறப்பட்ட சென்னை சென்டிரல்–விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ் (12712), சென்னை சென்டிரல்–குண்டூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டன.
வைகை எக்ஸ்பிரஸ்
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் (12635), நேற்று மதியம் 2.30 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டது.
இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடிக்கு புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605), நேற்று மாலை 4.40 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து காரைக்குடிக்கு இயக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary : "Wardha" Storm Echo: Chennai Central, Chennai Egmore Express trains operated some Cancel."Wardha" storm due to the bad weather and heavy rain Chennai Central, Egmore operated 17 trains were canceled.