திருவனந்தபுரம்: ஊழலை ஒழிக்கும் வகையிலும், மக்கள் ஊழலுக்கு எதிராக போராடும் வகையிலும் இரண்டு மொபைல் ஆப்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை(09-12-16) அறிமுகம் செய்துவைத்தார்.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், ஊழலுக்கு எதிரான 2 மொபைல் ஆப்களை அறிமுகம் செய்துவைத்தார்.
ஊழலற்ற , நிலையான வளர்ச்சி:
'அரைஸிங் கேரளா' (Arising Kerala), விசில் நவ் (Whistle Now) என்று பெயரிடப்பட்டுள்ள ஆப்களை அறிமுகம் செய்து வைத்த பினராயி விஜயன், "ஊழலற்ற மற்றும் நிலையான வளர்ச்சி என்பதே மாநில அரசின் நோக்கம். ஊழலை ஒழிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு, அரசு சாரா நிறுவனங்களில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.
ஊழலை ஒழிப்பது தொடர்பான பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் கேரள மக்கள் இந்த ஆப்கள் மூலம் வழங்கலாம் என்றார்பினராய் விஜயன்.
English Summary:
Thiruvananthapuram: to eradicate corruption, the fight against corruption to the people of Afghanistan both mobile Pinarayi Vijayan, Kerala Chief Minister on Friday (09-12-16) introduced.International Anti-Corruption Day observed across the globe.