சென்னை: ‛வர்தா' புயலின் மையப்பகுதி சென்னையை கடந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.‛வர்தா' புயலின் மைய பகுதி, இன்று பிற்பகல் சென்னையை கடந்தது.
அதன் பிறகு புயலின் கிழக்கு பகுதி சென்னையை கடக்க தொடங்கும். தற்போது, அதிதீவிர புயல் என்ற நிலையில் தான், ‛வர்தா' புயல் சென்னையை கடந்து வருகிறது. மாலை, 5.30 மணிக்கு பிறகு தான் அது சற்று வலுவிழந்து தீவிர புயல் என்ற நிலையை தொடும். அதன் பிறகு, புயல் என்ற நிலைக்கு குறைந்து, இரவு, 11:30 மணிக்கு குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலையை அடையும்.
இவ்வாறு பாலசந்திரன் கூறினார்.