புதுடெல்லி - ரூபாய் நோட்டுகள் தொடர்பான அனைத்து வழக்குகளும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு 6 வாரத்துக்குள் பதிலளிக்கவும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பணத் தட்டுப்பாடு:
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். இதையடுத்து மக்களிடத்தில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து நாடு முழுவதும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரிக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டை மத்திய அரசு நாடியது. மத்திய அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.
அத்துடன் ரூபாய் நோட்டுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது ரூபாய் நோட்டு தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அத்துடன் இந்த வழக்குகள் அனைத்தும் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்படுவதாகவும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.
காலக்கெடு நீட்டிப்பு இல்லை
மேலும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக 9 கேள்விகளை எழுப்பியுள்ள நீதிபதிகள், இது தொடர்பாக அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் எனவும் உத்தரவிட்டனர். அத்துடன் பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கவும் சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.